புதிய பனிப்போர் சிந்தனை ஆபத்தானது: உலக ஊடகங்கள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கடந்த வாரம் அந்நாட்டின் சி.என்.பி.சி. தொலைக்காட்சியில் பேசிய போது அமெரிக்கா, சீனாவுடன் தொடர்பு கொண்ட கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்தார்.
புதிய பனிப்போர் சிந்தனை ஆபத்தானது: உலக ஊடகங்கள்
புதிய பனிப்போர் சிந்தனை ஆபத்தானது: உலக ஊடகங்கள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கடந்த வாரம் அந்நாட்டின் சி.என்.பி.சி. தொலைக்காட்சியில் பேசிய போது அமெரிக்கா, சீனாவுடன் தொடர்பு கொண்ட கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்தார். டிரம்ப் அரசு, புதிய பனிப்போர் சிந்தனையைக் கொண்டு, சீன-அமெரிக்க உறவை தர்மசங்கடத்துக்குள் இழுத்துச் செல்ல முயன்று வருகிறது.

இது குறித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட கட்டுரை ஒன்றில், பாம்பியோவின் இந்த உரை இரு தரப்புறவுவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். டிரம்ப் அரசு புதிய பனிப்போரை வேண்டுமென்றே கிளப்பி வருகிறது. இந்த ஆபத்தான செயல், முழு அளவிலான மோதலை விளைவிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட் நாளேடு இதுபற்றி வெளியிட்ட ஒரு கட்டுரையில், அமெரிக்கா சீனாவுடன் சேர்ந்து பொது நலன்களைப் பெற விரும்பினால், தனது அடிப்படை கொள்கைகளைச் சரிபார்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

கார்னேஜி சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஸ்வைன்ஸ் இணையம் வழி கூறுகையில், கியூஸ்டனுக்கான சீனத் துணை நிலை தூதரகத்தை மூடிய செயல், கண்மூடித்தனமான அரசியல்வாதிகள் டிரம்பின் அரசியல் தலைவிதியை மீட்கும் முயற்சி தான் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 48 நாடுகளின் நிபுணர்கள் ஜுலை 25ஆம் நாள் காணொளி கூட்டம் வழியாக, புதிய பனிப்போருக்கு எதிரான கூட்டம் நடத்தினர். அமெரிக்கா பனிப்போர் சிந்தனை மற்றும் உலகின் அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயலை கைவிட வேண்டும் என்றும் சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவு அளிக்கிறது என்றும் இக்கூட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com