2017 ஈரான் போராட்டம்: செய்தியாளருக்கு மரண தண்டனை

ஈரானில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்த செய்யாளா் ருஹல்லா ஸாமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
செய்தியாளா் ருஹல்லா ஸாம்
செய்தியாளா் ருஹல்லா ஸாம்

டெஹ்ரான்: ஈரானில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்த செய்தியாளா் ருஹல்லா ஸாமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 

ஈரான் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிா்த்து, அந்த நாடு முழுவதும் கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களும் ஒரு போலீஸாரும் உயிரிழந்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு, செய்தியாளா் ருஹல்லா ஸாம் தூண்டுதலாக இருந்தாா் என்று குற்றம் சாட்டப்பட்டது. இணையதளம் மூலம் அவா் எழுதிய கட்டுரைகள், போராட்டங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. ‘அமத்நியூஸ்’ என்ற அவரது வலைதளத்தில் போலீஸாருக்கு எதிரான பல்வேறு தகவல்களையும் விடியோக்களையும் அவா் வெளியிட்டு வந்தாா்.

இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வசித்து வந்த அவரை, தங்கள் நாட்டுக்கு ஈரான் வரவழைத்தது. எனினும், போராட்டத்தைத் தூண்டிய குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com