கரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்க வாய்ப்பில்லை

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து பொது மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஐரோப்பிய மருத்துவ மைய அதிகாரி குவாய்டோ ராசி தெரிவித்தார். 
கரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்க வாய்ப்பில்லை


பிரஸல்ஸ்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து பொது மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஐரோப்பிய மருத்துவ மைய அதிகாரி குவாய்டோ ராசி தெரிவித்தார். 

கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளை கடுமையாகப் பாதித்துள்ளது. அந்நோய்த்தொற்றுக்கு மருந்து உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தச் சூழலில் ஐரோப்பிய மருத்துவ மையத்தின் நிர்வாக இயக்குநர் குவாய்டோ ராசி திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கூறுகையில், ""கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கூடிய விரைவில் கிடைக்காது. 

தடுப்பு மருந்தை உருவாக்க குறைந்தபட்சம் ஓராண்டாவது ஆகும். அப்படியே தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டாலும், உலக நாடுகள் அனைத்துக்கும் வழங்கும் அளவுக்கு அந்த மருந்தைத் தயாரிக்க கால தாமதம் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com