வூஹான் நகரத்திற்கான சீன அரசின் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள்! 

கரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆம் நாள் நிலவரப்படி 3,43,799 ஆக அதிகரித்துள்ளன.
வூஹான் நகரத்திற்கான சீன அரசின் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள்! 

கரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆம் நாள் நிலவரப்படி 3,43,799 ஆக அதிகரித்துள்ளன. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. கரோனா வைரஸால் முதன் முதலில் பாதிக்கப்பட்ட சீனா முதன் முதலில் அதில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதார மேப்பாட்டுக்காக உழைக்க தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் மாநகரம் இப்போது எப்படி உள்ளது. ஹூபெய் மாநிலத்திற்கு சீன அரசு என்ன என்னெ வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது என்பதை நிச்சயம் நாமும் அறிந்துகொள்ள வேண்டும். 

சீனாவில் தற்போது 13வது தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சீன அதிபர் ஷிச்சின்பிங் கரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹூபெய் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் விவாதக் கூட்டத்தில் 24ஆம் நாள் கலந்து கொண்டார். முன்னதாக மார்ச் 10 ஆம் நாள் அன்று, தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான மிக முக்கியமான கட்டத்தில் சீனா இருந்த போது, சீன அதிபர் ஹூபெய் மாநிலத்துக்கு நேரில் சென்று, தொற்று நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கிய அவர் தற்போது  சுமார் 70 நாட்களுக்கு பிறகு, ஹூபே மாநில பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் பேசுகையில், கொவைட்-19 தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபெய் மாநிலத்திற்கு தேவையான பல்வேறு ஒத்துழைப்புகளையும் நிதி ஆதரவுகளையும் அரசு தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.

மேலும், தேசிய மற்றும் பிரதேச வளர்ச்சியில் ஹூபெய் மாநிலத்தின் முக்கிய தகுநிலை மாறவில்லை. அம்மாநிலத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தேவையான உதவிகளை செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

கரோனா வைரஸ் பரவியபின் சரியான நடவடிகைகளை விரைந்து முன்னெடுத்து தொற்று நோயை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. இப்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நாம் இந்த நேரத்திலும் கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கையாள வேண்டி இருக்கிறது. ஏன் என்றால் இன்னமும் வெளிநாடுகளில் தொற்று நோய் பரவல் காணப்படுகிறது. சீனாவிலும் சில நேரங்களில் தொற்று நோய் பரவல் ஆங்காங்கே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே விழிப்புணர்வை தளர்த்த வேண்டாம். அனைவரும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். கடினமாக போராடி வென்ற தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை ஒருபோதும் கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 

மேலும் ஹூபெய் மாநிலத்தின் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படைகள் மாறவில்லை, பல ஆண்டுகளாகக் குவிந்திருக்கும் விரிவான நன்மைகள் மாறவில்லை, தேசிய மற்றும் பிராந்திய வளர்ச்சியில் முக்கிய நிலைப்பாடு மாறவில்லை. தற்போது, ​​ஹூபெய் மாநிலத்தின் அவசரத் தேவை தொற்று நோயை ஒழிப்பதுதான். ஹூபெயின் பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கை மீட்பதையும் வைரஸ் தொற்றைப் பயன் தரும் முறையில் தடுப்பதையும் எப்படி ஒருங்கிணைப்பது என்று சிந்தித்த போது இரண்டு மாதங்களுக்குமுன்பு ஹூபெய் மாநிலத்துக்கு சென்ற ஷிச்சின்பிங், 4 வார்த்தைகள் ஆயிரக்கணக்கான வழியை திறக்கும் என்ற முதுமொழியை நினைவுகூர்ந்தார். மேலும் ஹூபெய் ஒரு கடினமான காலத்தில் சிக்கியுள்ள நிலையில் ஒரு கையைக் கொடுத்து இன்னொரு கையை இழுத்தால் விரைவில் இயல்பான பாதைக்கு திரும்பலாம் என்ற நம்பிக்கையை விதைத்தார். அதற்கேற்ப மிக குறுகிய காலத்தில் தற்போது ஹூபெய் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து சீன அரசு, ஹூபே மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கொள்கையை வகுத்துள்ளது. 

தயாரிப்பு மற்றும் உற்பத்தியை மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வணிகச் சந்தையும் மீண்டும் தொடங்கப்பப்பட்டுள்ளது.

தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குப் பின் ஹூபெய் மாநிலம் புத்துயிர் பெறுவதற்கான ஆதரவை சீன அரசு, மற்ற மாநில அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக அதிபர் கூறினார். 

மேலும்  "புதுமையான மருத்துவ மற்றும் தொற்றுநோய் தடுப்பு கூட்டுறவு வழிமுறைகளையும், "நோய் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், நகரப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான கூட்டு வேலை முறையை மேம்படுத்துதல்", "கண்காணிப்பு வழிமுறையை மேம்படுத்துதல்" பற்றி பேசினார். 

தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறையாக கையாள்வதன் மூலம், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், விளையாட்டு இடங்கள்; நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றைப் படிப்படையாகத் திறக்க முடியும். குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வெளியேறும் நபர்களுக்கு, சுகாதாரக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், வெப்பநிலை சரிபார்க்கப்பட வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்ற விதிகள் இன்னமும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com