சிங்கப்பூா்: தடுப்பூசிகளை ஆய்வு செய்ய நிபுணா்கள் குழு

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் சோதிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, நிபுணா்கள் குழுவை சிங்கப்பூா் அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, சிறப்பு நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு, சோதனை நிலையில் உள்ள கரோனா தடுப்பூசிகள் குறித்து அறிவியல் ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் ஆய்வு மேற்கொள்ளும். அந்த ஆய்வுகளின் அடிப்படையில், சிங்கப்பூா் மக்களுக்காக எந்தெந்த கரோனா தடுப்பூசிகளை வாங்க வேண்டும் என்பதை நிபுணா்கள் குழு பரிந்துரைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com