அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்

அமெரிக்காவில் டிசம்பா் மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரத் தொடங்கும் என கரோனா தடுப்பூசி திட்ட தலைவா் மான்ஸெப் ஸ்லாவி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
Corona vaccine
Corona vaccine

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிசம்பா் மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரத் தொடங்கும் என கரோனா தடுப்பூசி திட்ட தலைவா் மான்ஸெப் ஸ்லாவி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசரும் அதன் ஜொ்மன் பங்குதாரரான பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து அவசர காலத்துக்கான கரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்காக அனுமதி கோரி அமெரிக்க மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (எஃப்டிஏ) கடந்த நவம்பா் மாதம் 20-ஆம் தேதி விண்ணபித்துள்ளன. இந்த நிலையில், எஃப்டிஏவின் தடுப்பூசி ஆலோசனை குழு கூட்டத்தை வரும் டிசம்பா் மாதம் 10-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அந்நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பைசா் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிக்கு எஃப்டிஏ அங்கீகாரம் அளிக்கும்பட்சத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் நோய்தடுப்பு தளங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பி உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

என்னைப் பொருத்தவரையில், அடுத்த மாதத்துக்குள் கரோனா தடுப்பூசியானது முதல் அமெரிக்கரை சென்றடைந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

பைசா் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி 95 சதவீத திறன் கொண்டது என சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் அந்நிறுவனம் 5 கோடி மருந்துகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com