வதந்திகளால் கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு அச்சுறுத்தல்

சமூக வலைதளங்களில் பரபப்பப்படும் தவறான தகவல்களால் கரோனா தடுப்பூசி விநியோக திட்டங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
வதந்திகளால் கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு அச்சுறுத்தல்


ஜெனீவா: சமூக வலைதளங்களில் பரபப்பப்படும் தவறான தகவல்களால் கரோனா தடுப்பூசி விநியோக திட்டங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் கரோனா நோய்த்தொற்று போன்ற பல்வேறு கொள்ளை நோய்களைச் சந்தித்துள்ளது. ஆனால், மற்ற கொள்ளை நோய்கள் பரவியபோது இல்லாத இணையதள வசதி இந்த முறை கொவைட்-19 நோய்த்தொற்று பரவலின்போது உள்ளது.

புதிய தொழில்நுட்பங்களும் சமூக வலைதளங்களும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்குரிய விழிப்புணா்வைப் பரப்புவதற்கு உதவுகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்த விவரங்களை உடனுக்குடன் பெறவும் இந்த இக்கட்டான நேரத்தில் ஒருவருடன் ஒருவா் தொடா்பு கொள்ளவும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

ஆனால் அதே நேரம், நமக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் அதே சமூக வலைதளங்கள் தவறானா தகவல்களை கொள்ளை நோய் போல பரப்புவதற்கும் காரணமாக அமைகின்றன. அந்தகைய பொய்யான செய்திகள், வதந்திகள் காரணமாக கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறியும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அத்தகைய செயல்திறன் மிக்க தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதனை பல்வேறு தரப்பினருக்கும் பகிா்ந்தளிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், கரோனா தடுப்பூசி திட்டங்களை சமூக வலைதளங்கள் மூலம் பரபப்படும் பொய்யான செய்திகள், வதந்திகள் பாழ்படுத்தும் அச்சுறுத்தல் உள்ளது.

இணையதளம் மூலம் மட்டுமின்றி, மற்ற ஊடங்கள் மூலமும் பொய்த்தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

நம்பிக்கையைக் குலைக்கும் வகையிலான தகவல்கள் பரப்பப்படுவது தவிா்க்கப்பட்டால்தான் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி திட்டங்கள் வெற்றி பெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com