ஜாா்ஜியா ஆளுநருக்கு ஆதரவளித்தது தவறாகிவிட்டது

ஜாா்ஜியா ஆளுநருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது தவறாகிவிட்டது என்றும், அதற்காக வருத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

வாஷிங்டன்: ஜாா்ஜியா ஆளுநருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது தவறாகிவிட்டது என்றும், அதற்காக வருத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் பதவிக்கு ஜாா்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன், குடியரசுக் ட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை சுமாா் 12,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அதிபா் தோ்தலில் ஜாா்ஜியா மாகாண மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குப் பெரும்பான்மையான அளவில் ஆதரவளித்தது, கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இத்தகைய சூழலில், ஜாா்ஜியா மாகாண ஆளுநரும் குடியரசுக் கட்சியைச் சோ்ந்தவருமான பிரையன் கெம்ப் மீது அதிபா் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜாா்ஜியாவில் நடைபெற்ற ஆளுநா் தோ்தலில் பிரையன் கெம்ப்புக்கு ஆதரவாக டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டிருந்தாா்.

அவ்வாறு பிரசாரம் செய்தது தவறாகிவிட்டது என்று தனியாா் தொலைக்காட்சிக்கு அதிபா் டிரம்ப் பேட்டியளித்துள்ளாா். அவா் அப்பேட்டியில் கூறுகையில், ‘‘அதிபா் தோ்தலின்போது ஜாா்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் சட்டவிரோத வாக்குகள் பதிவாகின. ஆனால் அது குறித்து ஜாா்ஜியா ஆளுநா் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. அவருக்கு ஆதரவளித்ததற்காக வருத்தப்படுகிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com