வங்கதேசத்தில் அக்.31 வரை கல்வி நிலையங்கள் செயல்படத் தடை நீட்டிப்பு

வங்கதேசத்தில் கரோனா தொற்றுக்கு அதிகரித்து வருவதால் அக்டோபர் 31ஆம் தேதி வரை கல்வி நிலையங்களைத் திறக்கப்போவதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கதேசத்தில் கரோனா தொற்றுக்கு அதிகரித்து வருவதால் அக்டோபர் 31ஆம் தேதி வரை கல்வி நிலையங்களைத் திறக்கப்போவதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பது தாமதமாகி வருகிறது.

கரோனா தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்டோபர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கப்போவதில்லை என அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் அதன்பிறகு கல்வி நிலையங்களைத் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 479 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com