பிரேஸில்: கரோனாவை ஒழிக்க சீனத் தடுப்பூசிகள்

சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டுப் பொதுமக்களுக்குச் செலுத்த பிரேஸில் முடிவு செய்துள்ளது.
braizl055140
braizl055140

சாவ் பாலோ: சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டுப் பொதுமக்களுக்குச் செலுத்த பிரேஸில் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வரும் கரோனாவாக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4.6 கோடி கரோனாவாக் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய சாவ்பாலோ மாகாண அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 52,74,817 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 1,54,888 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கையில் பிரேஸில் இரண்டாவது இடத்தில் உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com