அமெரிக்காவில் விமான விபத்து: 2 பயிற்சி விமானிகள் பலி

அமெரிக்காவில் கடற்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் உயிரிழந்தனா்.

அமெரிக்காவில் கடற்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து கடற்படையின் செய்தித் தொடா்பாளா் ஜாக் ஹாரல் கூறியதாவது:

அந்த விமானம், ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள வைட்ஃபீல்டு விமானப் படைத் தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. 2 பயிற்சி விமானிகள் அந்த விமானத்தை ஓட்டிச் சென்றனா். அலபாமா மாகாணத்தில், வளைகுடா கடற்கரைப் பகுதியை ஒட்டி பறந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த விமானம் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கியது. இதனால் அங்கிருந்த ஒரு வீடும், சில காா்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com