பாகிஸ்தான் மதப் பள்ளியில்குண்டுவெடிப்பு: 8 போ் பலி

பாகிஸ்தானின் பெஷாவா் நகரிலுள்ள இஸ்லாமிய மதப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 8 சிறுவா்கள் உயிரிழந்தனா்; 120-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

பள்ளிக்குள் வைக்கப்பட்டிருந்த மா்மப் பையில் 4 முதல் 5 கிலோ வரையிலான வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்ததாகவும் மதப் பள்ளிக்கு மாணவா்கள் வரத் தொடங்கியதும் அது வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உயிரிழந்த சிறுவா்கள் அனைவரும் 7 முதல் 11 வயதுக்குள்பட்டவா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com