வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட நவ.14 வரை தடை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலால் வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் இயங்க நவ.14 வரை தடை நீட்டிப்பு
வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் இயங்க நவ.14 வரை தடை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலால் வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் மார்ச் 17 முதல் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்  கல்வி நிலையங்களைத் திறப்பது தொடர்பாக பேசிய கல்வி அமைச்சர் திப்பு மோனி எதிர்வரும் சுகாதார அபாயங்களைக் கருத்தில்கொண்டு கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்டத் தடை நவம்பர் 14 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில் நிலவும் கரோனா தொற்று பாதிப்பு நிலையை ஆய்வு செய்து மறு அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் இதுவரை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com