ஈராக்கிலிருந்து தில்லிக்கு செப். 17-ல் சிறப்பு விமானம்

கரோனா முடக்கத்தால் ஈராக்கில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை மீட்டுவரும் வகையில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்க உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: கரோனா முடக்கத்தால் ஈராக்கில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை மீட்டுவரும் வகையில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்க உள்ளது.


கரோனா ஊரடங்கின் காரணமாக  வெளிநாடுகளில் சிக்கித்தவித்துவரும் இந்தியர்களை மீட்கும் வகையில் வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு குடிமக்கள் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அந்தவகையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 24-ஆம் தேதி வரை 6-ஆம் கட்டமாக சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஈரான் நாட்டின் பாஸ்ரா பகுதியிலிருந்து தில்லிக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பும் மக்கள் ரஷிய தலைநகர் பாக்தாத்திலுள்ள தூதரகத்தின் முன்பதிவு செய்திகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்புவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து செப்டம்பர் 12-ஆம் தேதி மாலைக்குள் தூதரகத்தில் அளிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com