இரட்டைக் கோபுர தாக்குதலின் 19-ஆம் ஆண்டு நினைவுநாள்

அமெரிக்காவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களைக் கொண்டு இரட்டைக் கோபுரங்களைத் தாக்கி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் இன்று.
இரட்டைக் கோபுர தாக்குதலின் 19-ஆம் ஆண்டு நினைவுநாள்
இரட்டைக் கோபுர தாக்குதலின் 19-ஆம் ஆண்டு நினைவுநாள்


நியூ யார்க்: அமெரிக்காவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களைக் கொண்டு இரட்டைக் கோபுரங்களைத் தாக்கி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் இன்று.

அமெரிக்காவில், 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 19ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிப்பதில், கரோனா பேரிடர் காரணமாக, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக 6 மாத காலமாக மூடப்பட்டிருந்த செப்டம்பர் 11 நினைவிடமும் அருங்காட்சியகமும் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டும் அஞ்சலி செலுத்தும் வகையில்,  வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. 

சனிக்கிழமையன்று, நேரம் குறிக்கப்பட்ட டிக்கெட்டை எடுத்துக் கொண்டு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநயாகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் வெவ்வேறு நேரத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நியூ யார்க்கில், நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் அனைத்தும், நினைவிட பிளாஸா மற்றும் அதனை ஒட்டியிருக்கும் இடத்தில் நடத்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com