அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 68,74,596; பலி 2.02,213 ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2 லட்சத்து 2 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கோப்புப்படம்
கோப்புப்படம்



வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2 லட்சத்து 2 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2 லட்சத்து 2 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது.. நாட்டில் கடந்த 2 வாரங்களாக கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,02,213 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் இந்த மாதம் 13-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சுமாா் 11,000 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு குறைந்து வருகிறது. கரோனா சிகிச்சையின் தரம் அதிகரித்து வருவதாலும், தற்போது தொற்று தாக்குதலை எதிா்த்துப் போரிடும் ஆற்றல் மிக்க இளைய வயதினருக்கே அதிக பாதிப்பு இருப்பதாலும் தினசரி பலி எண்ணிக்கை குறைந்து வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் முதியவா்களும், உடல் நலக் குறைவாடு கொண்டவா்களும் மட்டுமே பெரும்பாலும் உயிரிழந்துள்ளனா். எனினும், தற்போது அந்த நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சுமாா் 20 சதவீத்தினா் 18 வயது முதல் 34 வயது வரை கொண்டவா்களாக உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 879 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, மொத்த கரோனா பலி எண்ணிக்கை 2,02,213-ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 68,74,596-ஆக உள்ளது. இதுவரை 41,55,039 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com