குழந்தைப் பருவ புறக்கணிப்பு: இளம்பருவ கர்ப்பத்திற்கான வழி

குழந்தைப் பருவத்தில் அதிக அளவு புறக்கணிக்கப்படுவது இளமைப் பருவ கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில் அதிக அளவு புறக்கணிக்கப்படுவது இளமைப் பருவ கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில் அதிக அளவு புறக்கணிக்கப்படுவது இளமைப் பருவ கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சிட்னி: குழந்தைப் பருவத்தில் அதிக அளவு புறக்கணிக்கப்படுவது இளமைப் பருவ கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சிட்னி குழந்தை மருத்துவ இதழில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாலியல் மற்றும் உடல் ரீதியான அத்துமீறல்களை  ஒப்பிடும்போது மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவது மிகத்தீவிரமான துன்புறுத்தலாக கருதப்படுகிறது.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் புறக்கணிப்பு இளைமைப் பருவ கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது கல்வி இடைநிற்றல், மன அழுத்தம், அச்சம், உளவியல் பிரச்சினை, மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் புறக்கணிப்பு, முறையற்ற உணர்ச்சி  போன்றவற்றால் மிகமோசமான விளைவிகளை குழந்தைகள் சந்திப்பதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழக ஆய்வாளர் ஜேக் நஜ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் புறக்கணிப்பதன் மூலம் ஒழுக்கமின்மை, போதைப்பொருள் அடிமையாதல், எதிர்மறையான கற்பனைகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.

இது குறித்து 8,000 பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அவர்கள் கர்ப்பமடைந்த காலம் மற்றும் பருவமெய்தலின் தொடக்கம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. 

இதில் அறிவாற்றல், கல்வி, உளவியல், பாலியல் மற்றும் உடல் ரீதியாக அதிக அளவினான குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் மாவட்டத்தில் பதிவான குழந்தை துன்புறுத்தல் தரவுகளுக்கு இணையாக இருந்தது, இந்த ஆய்வின் முடிவை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com