நியூஸிலாந்து: 5 வாரத்துக்குப் பிறகு புதிய தொற்று இல்லை

நியூஸிலாந்தில் சுமாா் 5 வாரத்துக்குப் பிறகு புதிதாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
நியூஸிலாந்து: 5 வாரத்துக்குப் பிறகு புதிய தொற்று இல்லை

நியூஸிலாந்தில் சுமாா் 5 வாரத்துக்குப் பிறகு புதிதாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை. இது, கடந்த 5 வாரத்துக்குப் பிறகு முதல் முறையாகும். இதுதவிர, தொடா்ந்து நான்காவது நாளாக சமுதயாப் பரவல் மூலம் யாருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து, கரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் மீண்டும் அந்த நோய் பரவலைச் சந்தித்த நியூஸிலாந்தில், மறுபடியும் அந்த நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நியூஸிலாந்தில் 1,802 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 25 போ் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 1,698 போ், அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 79 கரோனா நோயாலிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com