தென்கொரியர் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரிய வடகொரிய அதிபர் கிம்

வடகொரிய ராணுவத்தால் தென்கொரிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியுள்ளார்.
தென்கொரியர் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரிய வடகொரிய அதிபர் கிம்
தென்கொரியர் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரிய வடகொரிய அதிபர் கிம்

வடகொரிய ராணுவத்தால் தென்கொரிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கு இடையே நீண்ட காலமாக இணக்கமான சூழல் இல்லாத நிலையில் தென்கொரிய அதிகாரி ஒருவர் வடகொரிய ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை வட கொரிய எல்லையில் உள்ள யியோன்பியோங் தீவுக்கு அருகே 47 வயதான தென்கொரிய அதிகாரி  ஒருவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்ட வடகொரிய ராணுவ வீரர்கள் அவர் வடகொரியாவிற்குள் ஊடுருவ முயல்வதாக எண்ணி அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார். இது தென்கொரியாவை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக இரு தரப்பு எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது. வடகொரியாவின் செயலை கடுமையாக கண்டித்துள்ள தென்கொரியா இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு தென்கொரிய அதிபர் மற்றும் நாட்டு மக்களிடமும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியுள்ளதாக அதென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com