பிரிட்டன்: அரச குடும்பத்து வருவாய் சரிவு

கரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்
பிரிட்டன்: அரச குடும்பத்து வருவாய் சரிவு

கரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.328 கோடி) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு குடும்பத்து ஆண்டுக் கணக்கு விவரங்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் அரசக் குடும்பத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியில் 1.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை உள்ளது. மேலும், 10 ஆண்டுகளில் 2.5 கோடி பவுண்ட் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று அந்த ஆண்டுக் கணக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com