வைரஸால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு நடவடிக்கை: சீனா

சீன அரசுத் தலைவர் ஷி  ஜின்பிங் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை, சேஜியாங் மாநிலத்தில் கள ஆய்வு செய்தார்.
வைரஸால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு நடவடிக்கை: சீனா

சீன அரசுத் தலைவர் ஷி  ஜின்பிங் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை, சேஜியாங் மாநிலத்தில் கள ஆய்வு செய்தார்.

சீனாவில் கொவைட்-19 நோயை எதிர்த்து போராட தொடங்கிய பிறகு, ஷிச்சின்பிங் மேற்கொண்டுள்ள 4ஆவது களஆய்வுப் பயணமாக இவ்வாண்டின் சீனப் புத்தாண்டுக்குப் பின் அவர் பெய்ஜிங்கை தாண்டி மற்ற இடங்களில் மேற்கொண்ட 2ஆவது களஆய்வுப் பயணமாகவும் இது திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்களஆய்வுப் பயணத்தின்போது, கொவைட்-19 நோய் பரவலினால் சீனாவின் வேறுபட்ட துறைகளிலான தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். இந்நிலைமையில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் இன்னல்களைச் சமாளிப்பதற்கு உதவி அளிக்கும் வகையில், நடுவண் அரசு தொடர்ச்சியான ஆதரவு நடவடிக்களை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, கொவைட்-19 நோய் உலகில் பரவி வருகின்றது. உலகப் பொருளாதாரம் கடும் அறைகூவலை எதிர்நோக்குகின்றது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, கடந்த பல ஆண்டுகளில் உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான பங்கு விகிதம் சுமார் 30விழுக்காட்டை எட்டியுள்ளது. சீனாவில் வைரஸை எதிர்க்கும் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுப் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. சரிவடைந்த சீனாப் பொருளாதாரம் விரைவாக மீட்கப்பட்டு வருகின்றது. இதுசீனர்களுக்கு ஊக்குவிப்பு தரும் அதேவேளையில் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு நிலைப்பு மற்றும் உறுதித் தன்மை கொண்டு வரும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com