டிக் டாக்குக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் யூ ட்யூப் !

பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக் டாக்குக்கு போட்டியாக புதிய செயலியை யூ ட்யூப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக்குக்கு போட்டியாக யூ ட்யூப்
டிக் டாக்குக்கு போட்டியாக யூ ட்யூப்

சான் பிரான்சிஸ்கோ: பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக் டாக்குக்கு போட்டியாக புதிய செயலியை யூ ட்யூப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயனாளர்கள் தங்களது திறமைகளை சிறிய விடியோ வடிவில் வெளிப்படுத்தி புகழ்பெற உதவும் செயலியான டிக் டாக் உலக அளவில் புகழ்பெற்றதாகும். இதன் வெற்றிக்குப் பிறகு பலரும் இதுபோல் செயலிகளை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிக் டாக்குக்கு போட்டியாக புதிய செயலியை யூ ட்யூப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுளின் பகுதியான யூ ட்யூப் உருவாக்கவுள்ள இந்த செயலிக்கு “ஷார்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.   

இந்த செயலியின் வாயிலாக பயனாளர்கள் தங்களது திறமைகள் அடங்கிய விடியோவை மொபைல் செயலி வழியாக உள்ளீடு செய்யலாம். கூடுதல் வசதியாக ‘யூ ட்யூப் மியூசிக்’ வசதியின் மூலமாக யூ ட்யூப் அனுமதி பெற்றுள்ள அத்தனை இசைத் தொகுப்புகளையும் தங்களது விடியோவுடன் இணைத்து பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த செயலியானது இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com