கரோனா தொற்று: சீனாவில் இன்று துக்க தினம் அனுசரிப்பு

சீனாவில் கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கரோனா தொற்று: சீனாவில் இன்று துக்க தினம் அனுசரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 10 லட்சத்தை தாண்டியுள்ளது பலி எண்ணிக்கையும் 50 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் பிறப்பிடமாக சீனா கருதப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கரோனா தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை அந்த நாட்டில் 81 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். 76 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சில ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வூஹான் நகரில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, அங்கு மிகப்பெரிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாகாணங்கள் முடக்கப்பட்டன. தொழில்களும் முடங்கின.

உலக நாடுகள் பலவும் கரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் சீனாவில், இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

சீனா முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com