புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்பு: சீன அதிபர் நேரடி உத்தரவு மற்றும் ஏற்பாடுகள்

சீன அதியுயர் தலைவர் ஷிச்சின்பிங் அவ்வப்போது நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்து,
புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்பு: சீன அதிபர் நேரடி உத்தரவு மற்றும் ஏற்பாடுகள்

சீன அதிபர் ஷி ஜின்பிங் அவ்வப்போது நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, புதிய ஏற்பாடுகளைச் செய்து, புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஜனவரி 7, 25, பிப்ரவரி 3, 5, 12, 14, 19, 21, 26, மார்ச் 4, 18, 25, 27 ஆகிய நாட்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ஜின்பிங் பலமுறை முக்கிய கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, புதிய ரக கரோனா வைரஸு பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஜனவரி 22ஆம் நாள் முதல், மார் 27ஆம் நாள் வரையிலான காலத்தில், பிரான்சு, ஜெர்மனி, சௌதி அரேபியா, அமெரிக்கா, கத்தார், மலேசியா, பிரிட்டன், பாகிஸ்தான், தென் கொரியா, கியோபா, இத்தாலி, ஸ்பெயின், எகிப்து, கசகஸ்தான், போலாந்து, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடனும், ஐ.நா. தலைமைச் செயலாளருடனும் ஷிச்சின்பிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பிப்ரவரி 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியைப் கள ஆய்வு செய்த ஷிச்சின்பிங், இந்நோய் பரவல் தடுப்புக்கான போராட்டத்தில் உறுதியுடன் வெற்றி பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியையும் பொருளதார மற்றும் சமூக வளர்ச்சிப் பணியையும்  ஒருங்கிணைத்து முன்னேற்றுவதற்காக, பிப்ரவரி 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

மார்ச் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நோய் தொற்று தடுப்புக்கான அறிவியல் ஆய்வுப் பணியை ஷிச்சின்பிங் பார்வையிட்டு அறிந்து கொண்டார்.

மார்ச் 10ஆம் நாள் ஹுபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியை ஆய்வு செய்ய ஷிச்சின்பிங் வூஹான் நகருக்குச் சென்றார்.

மார்ச் 26ஆம் நாள் கொவைட்-19 சமாளிப்புக்கான ஜி20 அமைப்பின் சிறப்பு உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். உலகளாவிய நோய் தொற்றை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், சர்வதேச சமூகம் உறுதியுடன் ஒருமனதாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், இதர நாடுகளுக்கு இயன்ற உதவிகளை வழங்கி உலகப் பொருளாதாரத்தின் நிலைப்புக்கு பங்களிக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 29ஆம் நாள் ட்சேஜியாங் மாநிலத்துக்குச் சென்ற ஷிச்சின்பிங், நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிப் பணியையும் ஒருங்கிணைத்து முன்னேற்றுவதற்காக ஆய்வு செய்யும் வகையில், ஏப்ரல் முதல் நாள் வரை அம்மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com