கொவைட்-19 நோயை எதிர்த்து பன்னாட்டு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த பதிவுகள்

சமீபத்தில், கொவைட்-19 நோய் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
கொவைட்-19 நோயை எதிர்த்து பன்னாட்டு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த பதிவுகள்

சமீபத்தில், கொவைட்-19 நோய் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலகின் பொது சுகாதாரத் துறையில் பெரிய அறைகூவல் எதிர்கொள்ளப்படுகிறது. 

ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும். உலக நாடுகளுடன் இணைந்து வைரஸை எதிர்த்து போராடும் போக்கில்,  சீனா தகவல்களைக் காலதாமதமின்றி வெளியிட்டு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறது. பன்னாட்டு ஒத்தழைப்பை நடைமுறைப்படுத்தி, தகவல்களை வெளியிடுவது குறித்த பதிவுகள் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு டிசம்பர் திங்களின் இறுதி ஹுபெய் மாநிலத்தின் வுஹான் மாநகராட்சி நோய்  தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி நோயாளிகள் இருப்பதைக் கண்டறிந்தது.

டிசம்பர் 31ஆம் நாள்

வூஹான் மாநகராட்சி சுகாதார ஆணையத்தின் இணையதளத்தில் நுரையீரல் அழற்சி நோய் குறித்த அறிக்கை ஒன்று வெளியானது. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

2020ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் அதேநாள் முதல், உலக சுகாதார அமைப்பு, தொடர்புடைய நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுக்கு சீனா முறையாக நோய் தகவல்களை தெரிவித்துள்ளது.

ஜனவரி 16ஆம் நாள்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், வெளிநாட்டு செய்தியாளர்கள் முதல்முறையாக கொவைட்-19 நோய் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதில், செய்தித் தொடர்பாளர் பேசுகையில் சீனா முனைப்புடன் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் தகவல்களை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

ஜனவரி 28ஆம் நாள்

கொவைட்-19 நோய்  தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி குறித்து, சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் முதல்முறையாக கூட்டம் நடத்தி, கேள்விகளுக்குப் பதில் அளித்தது.

பிப்ரவரி 5ஆம் நாள்

சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு கொவைட்-19 நோய் தொடர்பான கூட்டம் 2ஆவது முறையாக நடைபெற்றது. இணையதளம் மூலம் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் வெளிநாட்டு தூதரகங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பிப்ரவரி 6ஆம் நாள்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி, சீனாவுக்கான பிரிட்டன் தூதரைச் சந்தித்து, கொவைட்-19 நோய் பற்றிய புதிய நிலைமைகளை அறிமுகம் செய்தார்.

பிப்ரவரி 7ஆம் நாள்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி,  சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்க் குழுத் தலைவருடன் சந்தித்து, கொவைட்-19 நோய் பற்றிய புதிய நிலைமைகளை அறிமுகம் செய்தார்.

பிப்ரவரி 19ஆம் நாள்

சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரங்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகம்  3ஆவது முறையாக கூட்டம் நடத்தி கொவைட்-19 நோய் பற்றிய நிலைமைகளைத் தெரிவித்தது.

பிப்ரவரி 26ஆம் நாள்

சீனாவில் வெளிநாட்டவர்களுக்கு கொவைட்-19 தொற்று இருப்பது தொடர்பான தகவல்களை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மார்ச் 4ஆம் நாள்

சீன வெளியவு அமைச்சகமும் சீனத் தேசிய சுகாதார ஆணையமும், கொவைட்-19 நோய் குறித்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  நிபுணர்களுடன் இணைந்து காணொலிக் காட்சி கூட்டம் நடத்தி, நோய் தடுப்பு, வைரஸ் சோதனை உள்ளிட்டவை குறித்து பரிமாற்றம் மேற்கொண்டன.

மார்ச் 6ஆம் நாள்

சில செய்தி ஊடகங்களில் கரோனா வைரஸ் சீன வைரஸ் எனக் குறிப்பிடப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்தபோது, வைரஸின் தோற்றம் என்பதைத் தேடும் பணி இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இவ்வைரஸ் முதல்முறையாக  சீனாவில் பரவியது. ஆனால், சீனா வைரஸ் உருவான இடம் என்பது உறுதியில்லை என்று தெரிவித்தார்.

மார்ச் 19ஆம் நாள்

சீன வெளியவு அமைச்சகமும் சீனத் தேசிய சுகாதார ஆணையமும், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி குறித்து சீன-ஐரோப்பிய காணொலிக் காட்சிக் கூட்டம் நடத்தி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 18 நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் பணி அனுபவங்களை அறிமுப்படுத்தின.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com