கரோனா: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தை நெருங்குகிறது

கரோனா: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தை நெருங்குகிறது

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 88 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 88 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவில் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் தனிமைப்படுத்துவதும், பரிசோதனை மேற்கொள்வதுமே உரிய மருந்து என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுவரை உலகளவில் 1,518,773 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,35,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதுவரை 88,505 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 1,39,422 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 5,916 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 506 ஆகவும் உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 178 ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com