கரோனா தடுப்பு மருந்து உருவாக்குவதில் இந்தியா, சீனா இணைந்து பணி

கரோனா தடுப்பு மருந்து உருவாக்குவதில் இந்தியா, சீனா இணைந்து பணி

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியில் இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்ற முடியும் என்று சீனாவுக்கான இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியில் இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்ற முடியும் என்று சீனாவுக்கான இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, சீன அரசின் ‘சிஜிடிஎன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும். இரு நாடுகளிலும் அறிவியல், தொழில்நுட்ப வளங்கள் அதிகமுள்ளன. எனவே, நாம் இணைந்து பணியாற்றுவது உலகுக்கே பயனுள்ளதாக அமையும்.

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, உலக நாடுகள் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இதுவாகும்.

கரோனா சூழலை கையாள்வதற்காக, சீனாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. தரமான உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக, சீன அரசின் உதவியை இந்தியா கோரியுள்ளது. கடந்த ஜனவரி-பிப்ரவரியில் கரோனா சவாலை சீனா எதிா்கொண்டிருந்தபோது, சுமாா் 15 டன்கள் அளவிலான மருத்துவ நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியது.

சுகாதாரத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு நல்குவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு ஒத்துழைப்புடன் செயல்படுவது, இரு நாடுகளின் அறிவியலாளா்களுக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியா-சீனா இடையிலான 70 ஆண்டு கால தூதரக உறவுகளைக் கொண்டாடும் வகையில், இரு நாட்டு அரசுகள் சாா்பில் ஏப்.1-ஆம் தேதி தொடங்கி 70 நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பிரச்னை, அந்த நிகழ்ச்சிகளுக்கு தடையாக உருவெடுத்துவிட்டது.

இந்தியா, சீனா இடையிலான உறவுகள், இருதரப்புக்கு மட்டுமன்றி, பிராந்திய ரீதியிலும், உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக, இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் முக்கிய பங்காற்றி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com