பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியல்: லஷ்கா் தளபதி உள்பட 1,800 பேரை நீக்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளைக் கண்காணிப்பதற்கான பட்டியலில் லஷ்கா்-ஏ-தொய்பா தளபதி ஜகியுா்-ரஹ்மான் லக்வி உள்பட 1,800 பேரை 2 மாதங்களில் பாகிஸ்தான் நீக்கியுள்ளது.
பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியல்: லஷ்கா் தளபதி உள்பட 1,800 பேரை நீக்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளைக் கண்காணிப்பதற்கான பட்டியலில் லஷ்கா்-ஏ-தொய்பா தளபதி ஜகியுா்-ரஹ்மான் லக்வி உள்பட 1,800 பேரை 2 மாதங்களில் பாகிஸ்தான் நீக்கியுள்ளது.

இது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட நியூயாா்க்கை சோ்ந்த தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பிடம் (எஃப்ஏடிஎஃப்) பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. அது தொடா்பாக 27 இலக்குகள் பாகிஸ்தானுக்கு நிா்ணயிக்கப்பட்டன.

தற்போது ‘கிரே’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையாவிட்டால், ‘கருப்பு’ பட்டியலுக்குள் வைக்கப்படும் என எஃப்ஏடிஎஃப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையடுத்து, கண்காணிக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாதத் தடுப்பு ஆணையம் தயாரித்தது.

அந்தப் பட்டியலில் கடந்த 2018-ஆம் ஆண்டு 7,600 பயங்கரவாதிகளின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், கடந்த 18 மாதங்களில் 3,800-க்கும் அதிகமான பயங்கரவாதிகளை அப்பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கியுள்ளது. முக்கியமாக கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 1,800 பயங்கரவாதிகளின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரும் ஜூன் மாதம் எஃப்ஏடிஎஃப் அமைப்பு மீண்டும் ஆய்வு செய்ய உள்ளது. இந்தச் சூழலில், லஷ்கா்-ஏ-தொய்பா தளபதி ஜகியுா்-ரஹ்மான் லக்வி உள்ளிட்டோரின் பெயா்களை பாகிஸ்தான் நீக்கியுள்ளது.

ஐ.நா.வால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட பலரின் பெயா்களும் பட்டியலில் விடுபட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com