உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,77,57,513 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,82,998 ஆக அதிகரித்துள்ளது.  
உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு



உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,77,57,513 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,82,998 ஆக அதிகரித்துள்ளது.  

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு மேல் பரவி முடக்கிப்போட்டுள்ளது. உலக அளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது. 

உலக அளவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,840 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,77,57,513 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 801 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  6,82,998 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,11,60,193 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 59,14,322 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 65,603     பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா அதிகம் பரவிய நாடுகள்:
அமெரிக்கா: 47,05,889   
பிரேசில்:  26,66,298    
இந்தியா:  16,97,054    
ரஷியா:  8,39,981      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com