தென்னாப்பிரிக்காவில் கரோனா பொதுமுடக்கத்தால் 53% குறைந்த காண்டாமிருக வேட்டை 

தென்னாப்பிரிக்காவில் கரோனா ஊரடங்கால் காண்டாமிருகங்களின் மீதான வேட்டை 53% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கரோனாவால் குறைந்த காண்டாமிருக வேட்டை
கரோனாவால் குறைந்த காண்டாமிருக வேட்டை

தென்னாப்பிரிக்காவில் கரோனா ஊரடங்கால் காண்டாமிருகங்களின் மீதான வேட்டை 53% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் மொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கரோனா பொதுமுடக்கம் மனித வாழ்விற்கு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இயற்கை சூழலுக்கும் வன விலங்குகளுக்கும் பயனளித்து வருகிறது.

பொதுமுடக்க காலத்தில் பல்வேறு தளங்களில் மாசுபாடுகளின் அளவு குறைவது, கார்பன் வாயு வெளியேற்றத்தின் அளவு குறைந்துள்ளது என பல நன்மை தரும் செயல்களும் நடந்தேறியுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், தென்னாப்பிரிக்காவில் கரோனா பொதுமுடக்க காலத்தில் காண்டாமிருகங்களின் மீதான வேட்டையாடுதல் 53% குறைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இந்தாண்டின் முதல் 6 மாத காலத்தில் 166 காண்டாமிருகங்கள் தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடப்பட்டுள்ளன.இது கடந்த ஆண்டின் அளவுடன் ஒப்பிடும் போது 53% குறைந்தது ஆகும்.கடந்த 2019ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 316 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருந்துப் பொருள் உற்பத்தி, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு போன்ற காரணங்களுக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  

தென்னாப்பிரிக்காவில் மார்ச் 27 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஜூன் இறுதி வரை மூன்று மாதங்களில் 46 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன.

காண்டாமிருகங்கள் பெரும்பான்மையாக அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com