கரோனாவை கண்டறிய பிரிட்டனில் இரு புதிய பரிசோதனை முறைகள்

கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கான இரு புதிய பரிசோதனை முறைகளை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கரோனாவை கண்டறிய பிரிட்டனில் இரு புதிய பரிசோதனை முறைகள்

லண்டன்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கான இரு புதிய பரிசோதனை முறைகளை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதிலும் ஆா்டி-பிசிஆா் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பை 90 நிமிடங்களில் உறுதி செய்வதற்கான மேலும் இரண்டு பரிசோதனை முறைகளை பிரிட்டன் அரசு அறிமுகம் செய்துள்ளது.

லாம்போா்: ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் துணை அமைப்பு உருவாக்கியுள்ள ‘லாம்போா்’ என்ற அந்த கருவியானது, மக்களிடமிருந்து பெறப்படும் சளி மாதிரிகளை விரைவில் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லாம்போா் கருவி மூலமாக நாளொன்றுக்கு 15,000 மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும். கரோனாவை மட்டுமல்லாமல் மற்ற நோய்த்தொற்றுகளையும் கண்டறியும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா். பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் இந்தக் கருவி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதற்காக 4.5 லட்சம் கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

டிஎன்ஏ நட்ஜ்பாக்ஸ்: அதேபோல், ‘டிஎன்ஏ நட்ஜ்பாக்ஸ்’ என்ற கருவியானது சளி மாதிரியில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறை ஆராய்வதன் மூலமாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை நோயாளிகள் இருக்கும் இடத்துக்கே எடுத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள முடியும். இதற்கென தனி ஆய்வகங்கள் தேவையில்லை. அதன் காரணமாக, இந்தக் கருவி மூலமாக நாளொன்றுக்கு 15 பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இக்கருவி செப்டம்பா் மாதம் முதல் பிரிட்டனில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதற்காக 5,000 கருவிகள் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கருவி மூலமாக 58 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com