பிரேசிலில் கரோனா பாதிப்பு 2,859,073 ஆக உயர்வு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,859,073 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
Brazil's Covid-19 cases rise to 2,859,073

அந்த நாட்டில் ஒரே நாளில் 1,437 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 97,256 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரு நாள் முன்னதாக, பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 51,603 பாதிப்பும் 1,154 பலியும் பதிவாகியுள்ளன.

உலகளவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவில் இதுவரை 4.8 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகளவில் 18.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,03,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com