தூய்மையான இணையம் பற்றி அமெரிக்க அரசியல்வாதிகள் குறிப்பிடும் தகுநிலை இல்லை

ஆகஸ்ட் 5ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ “தேசிய பாதுகாப்பை” காரணமாக “தூய்மையான இணையம்” என்ற திட்டத்தை அறிவித்தார்.
தூய்மையான இணையம் பற்றி அமெரிக்க அரசியல்வாதிகள் குறிப்பிடும் தகுநிலை இல்லை

ஆகஸ்ட் 5ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ “தேசிய பாதுகாப்பை” காரணமாக “தூய்மையான இணையம்” என்ற திட்டத்தை அறிவித்தார். இயக்க வணிகம், செயலி, இணையச் சேவை முதலிய 5 துறைகளில் சீனத் தொழில் நிறுவனங்களின் பங்கைத் தவிர்ப்பது அதன் நோக்கமாகும்.

அதையடுத்து 6ஆம் நாள், அமெரிக்க தலைவர்கள் சீன சமூகப் பரிமாற்றத் தொழில் நிறுவனங்களின் மீது தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசு உத்தரவில் கையொப்பமிட்டுள்ளனர். இது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பைச் சீர்குலைப்பதாக அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் கூறிய போதிலும், அவர்களால் அதை ஆதாரப்பூர்வமாக நிருபிக்க முடியாது. மாறாக, ஜெர்மனி தலைமையமைச்சர் மெர்கல் அம்மையாரின் தனிநபர் செல்லிடபேசி அமெரிக்காவால் ஒட்டுக்கேட்கப்பட்டது பற்றிய செய்தி 2013ஆம் ஆண்டு பரவலாக வெளியானது.

2018ஆம் ஆண்டு, அமெரிக்கா ரஷியாவின் மீது இணையதளத் தாக்குதல் நடத்தியது. அதே ஆண்டின் செப்டம்பர் திங்கள் அமெரிக்க அரசுத் தலைவர் இணைய நெடுநோக்குத் திட்டம் ஒன்றில் கையொப்பமிட்டு, இணையத் தாக்குதல் உரிமையை அமெரிக்க இராணுவப் படைக்கு வழங்கினார். இணையத் தாக்குதல் நடத்தியவராகவும் உலக இணையப் பாதுகாப்பான மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் அமெரிக்கா தான் இருக்கிறது என்று இந்த பெருமளவிலான உண்மைகள் காட்டுகின்றன.

தகவல்: சீன ஊடக குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com