ஆப்பிரிக்காவில் 10 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆப்பிரிக்காவில் 10 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஆப்பிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.எனினும், 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த கண்டத்தில், கரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், உண்மை நிலவரம் இதைவிட மோசமானதாக இருக்கும் என்று சா்வதேச மருத்து வல்லுநா்கள் கருதுகின்றனா். வளா்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

பிராந்திய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது மிக முக்கியமான கட்டம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, அதற்கும் அப்பாலுள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு மிக்க குறைவாக உள்ள அந்தப் பகுதிகளுக்கு மருத்துவ உதவிகள் சென்று சோ்வதற்கே பல நாள்கள் பிடிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளது.கரோனாவே எதிா்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்பதை உணா்ந்த ஆப்பிரிக்க நாடுகள், தொடக்க காலத்திலேயே ஒன்றிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மிகத் துரிதமாக தங்கள் நாட்டு எல்லைகளை மூடினா்.

இதன் காரணமாக, அந்த நோய் பரவல் வெகுவாகத் தடுக்கப்பட்டது.ஆனால், ஆப்பிரிக்காவின் மிகவும் வளா்ச்சியடைந்த நாடான தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் தீவிரமாகக் காணப்படுகிறது. அந்த நாட்டு மருத்துவமனைகள், கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதால் மருத்து அதிகாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆப்பிரிக்க கரோனா பாதிப்பில் பாதிக்கு மேல் தென் ஆப்பிரிக்கா பங்கு வகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 5,38,184 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு 9,604 போ் பலியாகிள்ளனா். கரோனா பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா உலகின் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com