கரோனா இறப்பு: 1 லட்சத்தைக் கடந்தது பிரேசில்

பிரேசிலில் நாளுக்குநாள் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சனிக்கிழமை நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது.
பிரேசிலில் ஒரு லட்சத்தைக் கடந்தது கரோனா இறப்பு
பிரேசிலில் ஒரு லட்சத்தைக் கடந்தது கரோனா இறப்பு

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பல்வேறு நாடுகள் தவித்து வருகின்றன.நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா இறப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி பிரேசிலில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் இதுவரை கரோனாவால் 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக தினந்தோறும் 1000 இறப்புகள் பிரேசிலில் பதிவாகின்றன.கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 905 பேர் பலியாகியுள்ளனர்.

பிரேசிலைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.சனிக்கிழமை காலை கரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புகழ்பெற்ற கோபகபனா கடற்கரையில் மணல் மீது சிலுவைகளை வைத்து 1,000 சிவப்பு பலூன்கள் வானத்தில் பறக்க விடப்பட்டன.

கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் பிரேசில் அரசு அக்கறையின்மையுடன் செயல்படுவதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com