லெபனான் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜிநாமா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று, அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
லெபனான் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜிநாமா

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று, அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 2013}ஆம் ஆண்டு முதல் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இது எதிர்பாராதவிதமாக வெடித்து, கடந்த 4}ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 160 பேர் பலியாகினர்; 6,000 பேர் காயமடைந்தனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 

பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, லெபனானில் போராட்டங்கள் நிகழ்ந்தன. 

ஏற்கெனவே ஊழல், நிர்வாக கோளாறு ஆகியவற்றால் அதிருப்தியடைந்திருந்த மக்கள் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த வெடிவிபத்து சம்பவம் அவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. 

போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்ற வந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். 

இதையடுத்து தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், "மக்களுடன் இணைந்து மாற்றத்துக்காக செயல்படவுள்ளேன். ஊழல்புரியும் அரசியல்வாதிகள் தங்கள் செயலுக்காக வெட்கமடைய வேண்டும். அவர்களின் ஊழலே நாட்டின் தற்போதைய மோசமான நிலைக்கு காரணம்' என்றார்.  

வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று ஹசன் தியாபின் அமைச்சரவையும் ராஜிநாமா செய்தது. 
இதற்கு முன் பிரதமராக இருந்த சாத் ஹரிரி மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ஹசன் தியாபும் குறுகிய காலத்தில் பதவி விலகியுள்ளார். இவர் அரசியலுக்கு வரும் முன், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com