ரஷியாவில் கரோனா தடுப்பூசி அறிமுகம்: புதின் மகள் செலுத்திக்கொண்டார்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான முதல் தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
​கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான முதல் தடுப்பு மருந்தை ரஷியா கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
​கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான முதல் தடுப்பு மருந்தை ரஷியா கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.


கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான முதல் தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அரசு அலுவலர்களுடனான கூட்டத்தில் புதின் தெரிவித்ததாவது:

"எனக்குத் தெரிந்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பூசியை  உலகிலேயே முதன்முறையாக இன்று காலைதான் பதிவு செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பூசியின் உற்பத்தியை வரும் காலத்தில் விரைவில் தொடங்க முடியும் என்று நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது.

என்னுடைய மகள்களில் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை முயற்சியில் அவரும் அங்கம் வகிக்கிறார். அவருக்கு முதன்முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல் வெப்ப நிலை 38 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. அடுத்த தினம், 37 டிகிரி செல்ஷியஸ் ஆனது." என்றார் அவர்.

இதனிடையே ரஷிய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்கைல் முராஷ்கோ தெரிவிக்கையில், "இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com