2.5 கோடியைக் கடந்தது கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2.5 கோடியைக் கடந்தது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினா்.

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2.5 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 2.7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 2.5 கோடியைக் கடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த 25,224,116-ஆக உள்ளது.கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா பல வாரங்களாக தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மட்டும் 61,41,057 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34,09,003 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 25,45,179 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 16,025 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் அதிகம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 38,46,965 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,20,498 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 30,06,812 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 719,655 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 8,318 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே வட அமெரிக்கப் பிராந்தியத்தில்தான் அதிகம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்கா இடம் பெற்றுள்ள அந்தப் பிராந்தியத்தில், மொத்தம் 72,73,448 பேருக்கு கரோனோ நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,69,788 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். அந்தப் பிராந்தியத்தில் இதுவரை 41,81,173 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 28,22,487 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 20,403 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வட அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, தென் அமெரிக்கப் பிராந்தியம் கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 62,01,039 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அந்தப் பிராந்தியத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பிரேஸில் முதலிடம் வகிக்கிறது.

கரோனா நோய் பாதிப்பால் இந்த பிராந்தியத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2 லட்சத்தைக் கடந்தது.

இந்த இரு பிராந்தியங்களுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் கரோனா நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிராந்தியத்தல் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதுவரை ஆசியாவில் 69 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். 55,51,562 கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 12 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சா்வதேச அளவில் கரோனா பரிசோதனை போதிய எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வெளிடப்படும் புள்ளிவிவரங்களைவிட பல மடங்கு அதிகமானவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது...

பாதிப்பு : 2,52,00,294
பலி: 8,47,293

நாடுகள்:  பாதிப்பும் - பலியும்

அமெரிக்கா 61,41,057 - 1,86,875
பிரேஸில் 38,46,965 - 1,20,498
இந்தியா 35,42,733 - 63,498
ரஷியா 9,90,326 - 17,093
பெரு 6,39,435 - 28,607
தென் ஆப்பிரிக்கா 6,22,551 - 13,981
கொலம்பியா 5,99,914 - 19,064
மெக்சிகோ 5,91,712 - 63,819
ஸ்பெயின் 4,55,621 - 29,011
சிலி 4,08,009 - 11,181
அா்ஜென்டினா 4,01,239 - 8,401
ஈரான் 3,73,570 - 21,462
யுகே 3,32,752 - 41,498
சவூதி அரேபியா 3,14,821 - 3,870
பங்களாதேஷ் 3,10,822 - 4,248
பாகிஸ்தான் 2,95,636 - 6,288
பிரான்ஸ் 2,72,530 - 30,602
துருக்கி 2,67,064 - 6,284
இத்தாலி 2,66,853 - 35,473
ஜொ்மனி 2,42,971 - 9,363
மற்றவைகள் 42,83,713 - 1,26,177

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com