எகிப்தில் ஒருலட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

எகிப்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 230 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கெய்ரோ: எகிப்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 230 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது.

சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் எகிப்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிதாக 230 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த சில நாள்களில் பதிவாகும் கரோனா தொற்று எண்ணிக்கையை விட அதிகமானது. இதுவரை 5 முறை ஒரே நாளில்  200-க்கும் அதிகமாக கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

எகிப்தில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,727-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 23 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 5,399-ஆக அதிகரித்துள்ளது. 818 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

எகிப்து நாட்டில் முதன்முறையாக  கடந்த பிப்ரவரி மாதம் கரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. மார்ச் 8-ஆம் தேதி முதல் கரோனா உயிரிழப்பு நிகழ்ந்தது. எகிப்து நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 3 முறை மருந்துகளை அனுப்பி சீனா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com