சீன-தெற்காசிய இளைஞர்கள் காணொலி வழி கவிதை வாசிப்பு 

9 ஆவது சீன - தெற்காசிய சர்வதேச பண்பாட்டுக் கருத்தரங்கைச் சேர்ந்த சீன – தெற்காசிய இளைஞர்கள் காணொலி மூலம் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி ஆகஸ்டு 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
Video-reading poetry by chino-South Asian youth

இந்நிகழ்ச்சியில் சீன மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் காணொலி மூலம் பங்கேற்று கவிதைகளை வாசித்து ஒருவருக்கு ஒருவர் அன்பு மற்றும் நட்புறவைப் பகிர்ந்து கொண்டனர். அதோடு,  கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நம்பிக்கை மற்றும் துணிவையும் வழங்கிக் கொண்டனர்.  

இந்நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் மற்றும் வங்காளத்தேசத்தின் டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சீனப் புகழ்பெற்ற இலக்கிய படைப்புகளை வாசித்தனர். சீனாவின் பீகிங் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை வாசித்தனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com