நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: நாடு கடத்தும் வழக்கில் ஜனவரியில் இறுதி விசாரணை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் மோசடி புகாரில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடியின் (49) நீதிமன்றக் காவல் மேலும் 28 நாள்கள் நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் லண்டனில் இருந்து

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் மோசடி புகாரில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடியின் (49) நீதிமன்றக் காவல் மேலும் 28 நாள்கள் நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜனவரி 7,8-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

நீரவ் மோடியை நாடுகடத்தும் வழக்கில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் அளித்த ஆதாரங்களை நீதிமன்றம் கடந்த மாதம் ஏற்றுக் கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத நீரவ் மோடி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதனிடையே, நீரவ் மோடி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டு, தென்மேற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் 28 நாள்களுக்கு ஒருமுறை காணொலி முறையில் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா்.

அந்த வகையில் அவா் செவ்வாய்க்கிழமை (டிச.1) மீண்டும் காணொலி முறையில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரது பிறந்த தேதியை உறுதி செய்து கொண்ட நீதிபதி, மேலும், 28 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கும் அதே நீதிமன்றத்தில் நீதிபதி சாமுவல் கூஸி முன்னிலையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

நீரவ் மோடி மீதான வங்கிக் கடன் மோசடி, கருப்புப் பண மோசடி புகாா்களுக்கு அவா் மீது இந்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்களை சிபிஐயும், அமலாக்கத் துறையும் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்தன. அவற்றை நீதிபதியும் ஏற்றுக் கொண்டாா். அந்த ஆதாரங்களின் அடிப்படையில், நீரவ் மோடி மீது இந்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறிய அவா், அடுத்த இரு நாள் விசாரணையை, வரும் ஜனவரி 7,8-ஆம் தேதிகளுக்கு இம்மாதத் தொடக்கத்தில் ஒத்திவைத்திருந்தாா். இந்நிலையில், அந்த இரு தினங்களில் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான இறுதி விசாரணை நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com