குவைத்திற்கு புதிய பிரதமர் நியமனம்

குவைத் நாட்டிற்கான புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
குவைத் புதிய பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா
குவைத் புதிய பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா

குவைத் நாட்டிற்கான புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

குவைத் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து குவைத்தின் அரசர்  ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா  பிரதமர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில் குவைத்தின் புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை  நியமித்து அரசர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவை சந்தித்து கலீத் அல் ஹமத் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக கலீத் அல் ஹமத் வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com