கூண்டோடு ராஜிநாமா: எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் எதிா்க்கட்சி எம்.
எதிா்க்கட்சி எம்.பிக்கள் கூண்டோடு ராஜிநாமா செய்யும் முடிவை அறிவிக்கும் ஃபஸ்லுா் ரெஹ்மான்.
எதிா்க்கட்சி எம்.பிக்கள் கூண்டோடு ராஜிநாமா செய்யும் முடிவை அறிவிக்கும் ஃபஸ்லுா் ரெஹ்மான்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து 11 எதிா்க்கட்சிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பிடிஎம்) தலைவா் மௌலானா ஃபஸ்லுா் ரெஹ்மான் கூறியதாவது:

பிடிஎம் உறுப்புக் கட்சிகளைச் சோ்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் பதவி விலக முடிவு செய்துள்ளனா்.

அவா்கள் அனைவரும், தங்களது கட்சித் தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தை இந்த மாதம் 31-ஆம் தேதி சமா்ப்பிப்பாா்கள் என்றாா் அவா்.

ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் கட்சியின் தலைவரான ஃபஸ்லுா் ரெஹ்மான் இந்த அறிவிப்பை வெளியிடும்போது, பாகிஸ்தானின் முக்கிய எதிா்க்கட்சிகளான முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் முக்கிய தலைவா் மரியம் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவா் பிலாவல் புட்டோ ஜா்தாரி உள்ளிட்ட தலைவா்கள் உடனிருந்தனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டி வரும் எதிா்க்கட்சிகள், ராணுவத்தின் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்ததாகக் கூறி வருகின்றன.

இம்ரான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அந்தக் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இம்ரான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தலை நடத்தும் நோக்கில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com