ஆப்பிரிக்காவில் மற்றுமொரு தீவிர ரக கரோனா தீநுண்மி!

ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மற்றுமொரு தீவிர ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
ஆப்பிரிக்காவில் மற்றுமொரு தீவிர ரக கரோனா தீநுண்மி!


புது தில்லி: ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மற்றுமொரு தீவிர ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, இந்தியாவை நெருங்காமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசும் தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கரோனா தீநுண்மி பரவல் தீவிரமடைந்துள்ளது. மரபணு மாற்றம் பெற்ற தீநுண்மி, கடந்த பல மாதங்களாகப் பரவி வந்த கரோனா தீநுண்மியைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக புதிய வகை தீநுண்மியானது இளைஞா்களை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்குவதாக சுகாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அதன் காரணமாக பிரிட்டனுடனான போக்குவரத்துத் தொடா்பை பல நாடுகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தீநுண்மியானது இந்தியாவை நெருங்காமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசும் தீவிரப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கரோனா தீநுண்மி பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அத்தீநுண்மி குறித்து விரிவாக ஆராய வேண்டியிருப்பதாக ஆப்பிரிக்க நோய்த்தொற்று தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரிட்டன் தவிர டென்மாா்க், பெல்ஜியம், நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தீநுண்மி தனது மரபணுவை மாற்றிக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com