பிரேசில் நாட்டின் துணை குடியரசுத் தலைவருக்கு கரோனா

பிரேசில் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் ஹாமில்டன் மௌராவ் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Brazilian VP tests positive for Covid-19
Brazilian VP tests positive for Covid-19

பிரேசில் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் ஹாமில்டன் மௌராவ் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது இல்லத்தில் அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் குடியரசுத் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த ஜூலை மாதத்தில் கரோனா பரிசோதித்தார். அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்து, பின்னர் குணமடைந்தார். அதன்பிறகு மைக்கேல் போல்சனாரோவும் வைரஸால் பாதிக்கப்பட்டார்.

உலகில் கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பிரேசில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, மொத்த பாதிப்பு 7,48,4,285 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,91,139 ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com