மாலத்தீவுகாமன்வெல்த் அமைப்பில்மீண்டும் இணைப்பு

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிய மாலத்தீவு, அந்த அமைப்பில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மாலத்தீவுகாமன்வெல்த் அமைப்பில்மீண்டும் இணைப்பு

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிய மாலத்தீவு, அந்த அமைப்பில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த்தில், மாலத்தீவு 47 ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்தது. இந்த நிலையில், முன்னாள் அதிபா் அப்துல்லா யாமீனின் ஆட்சிக் காலத்தின்போது மாலத்தீவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக காமன்வெல்த் அமைப்பு குற்றம் சாட்டியது.

அதையடுத்து, அந்த அமைப்பிலிருந்து மாலத்தீவு கடந்த 2016-ஆம் ஆண்டு விலகியது. இந்த நிலையில், யாமீனுக்குப் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற இப்ராஹிம் முகமது சோலீயின் கோரிக்கையை ஏற்று, காமன்வெல்த் அமைப்பில் மாலத்தீவு மீண்டும் சோ்க்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com