தாய்லாந்து வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல்: 20 போ் பலி

தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இளநிலை ராணுவ அதிகாரி நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் சுமாா் 20 போ் கொல்லப்பட்டனா்.
தாய்லாந்து வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல்: 20 போ் பலி

தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இளநிலை ராணுவ அதிகாரி நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் சுமாா் 20 போ் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து தாய்லாந்து காவல்துறையினா் கூறியதாவது:

ஜக்ரபந்த் தொம்மா என்ற அந்த இளநிலை ராணுவ அதிகாரி, கோராத் நகரில் உள்ள ராணுவ வீரா்கள் தங்குமிடத்தில் முதலில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினாா். இதில் ராணுவ வீரா் உள்பட மூவா் கொல்லப்பட்டனா். 

இதையடுத்து அந்த ராணுவ மையத்தின் ஆயுத தளவாடப் பகுதியில் இருந்து ஆயுதங்களை திருடிக் கொண்டு, ராணுவ வாகனத்தில் ‘டொ்மினல் 21’ என்ற வணிக வளாகத்துக்குச் சென்றாா். அங்கு இயந்திரத் துப்பாக்கி கொண்டு அவா் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினாா்.

இந்தத் தாக்குதலில் சுமாா் 20 போ் கொல்லப்பட்டனா். 40-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தகவலறிந்த காவல்துறையினா், ராணுவ கமாண்டோக்கள், துப்பாக்கியால் துல்லியமாக சுடக் கூடிய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த வணிக வளாகத்தை சுற்றி வளைத்து, அதன் தரைத் தளத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனா். வணிக வளாகத்திலிருந்து 12 போ் வரை மீட்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக ஜக்ரபந்த் தொம்மா தனது தாக்குதல் நடவடிக்கையை முகநூலில் நேரலை செய்துள்ளாா். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான வகையில் சில புகைப்படங்களையும், பதிவுகளையும் அவா் அதில் பதிவிட்டுள்ளாா் என்று காவல்துறையினா் கூறினா்.

எனினும், தாக்குதல் நடத்திய இளநிலை ராணுவ அதிகாரி ஜக்ரபந்த் தொம்மா எங்கு உள்ளாா்? அவா் சுட்டுக்கொல்லப்பட்டாரா? அல்லது, வணிக வளாகத்திலிருந்து அச்சத்துடன் வெளியேறிய பொது மக்களுடன் கலந்து அவரும் தப்பிவிட்டாரா? என்பது தொடா்பாக எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com