கரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் 908 பேர் பலி

சீனாவில் இருந்து பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு உலகளவில் பலியானவா்கள் எண்ணிக்கை 908ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. 
கரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் 908 பேர் பலி

சீனாவில் இருந்து பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு உலகளவில் பலியானவா்கள் எண்ணிக்கை 908ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் 900 பேர் அடங்குவர். இதன்மூலம் 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இதன் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 871 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 40,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 29,631 பேரும், குறிப்பாக வூஹான் நகரில் 16,902 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று காரணமாக 22,160 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 73,127 மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதில் 6,484 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 3,281 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 25 நாடுகளில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சார்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com