பதற்றம் அல்லது திடீர் சோர்வு ஏற்பட்டால் இதைச் செய்யுங்கள்: ஆய்வு முடிவு

சாக்லேட்டில் இருக்கும் ஆர்கானிக் கலவைகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து, மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்கிறது ஒரு ஆய்வு.
பதற்றம் அல்லது திடீர் சோர்வு ஏற்பட்டால் இதைச் செய்யுங்கள்: ஆய்வு முடிவு

சாக்லேட்டில் இருக்கும் ஆர்கானிக் கலவைகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து, மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்கிறது ஒரு ஆய்வு.  இந்த ஆய்வின் முடிவு ஹெரிடேஜ் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும், சாக்லேட் பிரியர்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் என்பது உண்மை.

சாக்லேட் சாப்பிட்டால் உடலிலுள்ள ஹார்மோன்கள் தூண்டப்பட்டு  நேர்மறை எண்ணங்களை உருவாகி, சந்தோஷ உணர்வுகள் தோன்றுமாம். காரணம் அதில் அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஏராளமான உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

தினமும் சாக்லேட்டை அளவாகச் சாப்பிட்டால் இதயதுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 'கோக்கோ'வில், இதய நோய், புற்று நோய், டிப்ரெஷன் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஆன்ட்டி-ஆக்சிடன்ட் பாலிஃபீனால்ஸ் உள்ளது.

சாக்லேட்டுகளில் பால் கலக்காத டார்க் சாக்லேட்டுகள் உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்காதவை. டார்க் சாக்லேட்டுகளில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் கோகோ இருப்பதால் அவற்றில் போதுமான ஃபிளேவனாய்டுகள் இருக்கும். எனவே அவ்வப்போது தேவையான அளவில் அவற்றைச் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது. சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் மற்றும் தியோபுரோமைன் ஆகியவை மத்திய நரம்பு மண்டலத்தையும் மூளையில் ரத்த ஓட்டத்தையும் தூண்டுச் செய்பவை. சாக்லேட் சாப்பிடுவதால் உடல் சோர்வு குறைந்து புதிய எண்ணங்கள் தோன்றும். இதனால் மகிழ்ச்சியலைகள் மனதில் உருவாகி, உடல் சுறுசுறுப்படையும், சுவாசம் மற்றும் இதயம் சீராக செயல்படும்.

சாக்லேட் சாப்பிடுவதால் மூளையில் செரோட்டனின் எனும் ரசாயனச் சுரப்பு அதிகரிக்கும். சீரான பசி, சீரான இதயத் துடிப்பு மற்றும் சீரான சுவாசம் ஆகியவற்றுக்கு செரோட்டனின்தான் முக்கியக் காரணம். இந்த ஹார்மோன் சுரப்புக் குறைந்தால், மன அழுத்தம் ஏற்படும்.

பதற்றம் அல்லது திடீர் சோர்வு ஏற்பட்டால் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் போதும், சாக்லேட் சிறந்த மருந்தாகச் செயல்பட்டு உடனடி நிவாரணம் அளிக்கும். ஆனால் டார்க் சாக்லேட்டில் குறைவாக இருக்கும் சர்க்கரை மற்றும் அதிகமான கோகோ பொருட்கள் இரவில் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்திலேயே சுயநினைவை இழக்கச் செய்யும். ஆகையால் இனிமேல் இரவு உணவிற்குப் பிறகு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை முதலில் நிறுத்தி விடுங்கள், அல்லது மிகவும் குறைவாக சாப்பிடுவது மிகப் பெரிய பிரச்னை ஏதும் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com