புதிய ரக கரோனா வைரஸ்: உலகச் சுகாதார அமைப்பு கருத்து

சீன அரசு வெளியிட்ட தரவுகளின்படி, பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களில், புதிய கரோனா
புதிய ரக கரோனா வைரஸ்: உலகச் சுகாதார அமைப்பு கருத்து

சீன அரசு வெளியிட்ட தரவுகளின்படி, பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களில், புதிய கரோனா வைரஸால் முறையே புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4ஆம் நாளின் நிலைமையை விட தெளிவாகக் குறைந்துள்ளது. 

இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பின் தலைமைச் செயலாளர் டன் தேசாய் கூறுகையில்..
இது ஒரு நல்ல தகவல் என்று தெரிவித்தார். மேலும், புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய திட்டப்பணியைத் துவக்கும் வகையில், சர்வதேச சமூகம் 67கோடியே 50இலட்சம் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்ட வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருத்துவச் சோதனை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லாத நாடுகளில் புதிய ரக கரோனா வைரஸின் பரவல் குறித்து கவலை எழுந்துள்ளதால், சுகாதார அமைப்புமுறையில் பலவீனமாக இருக்கும் நாடுகளுக்கு உதவி அளிப்பது அவசரமானது என்று இவ்வமைப்பு தெரிவித்தது. 

தவிரவும், தற்போது முகஉறை உள்ளிட்ட தற்காப்புப் பொருட்களின் விநியோகப் பற்றாக்குறை தொடர்பாக டன் தேசாய் கூறுகையில், 
சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் ஏராளமான தற்காப்புப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்தப் பொருட்கள் வேண்டியவர்களுக்குக் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், உலகளவிலான விநியோகச் சங்கிலியிலுள்ள தயாரிப்பு, விற்பனை, பொருள் போக்குவரத்து ஆகிய துறைகளிலான சில தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் 7ஆம் நாளில் தொடர்பு கொண்டதாகவும் டன் தேசாய் தெரிவித்துள்ளார். 

தகவல் :சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com